மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நிமிர்ந்து நில் படத்தில் நடித்த முடித்த சமயம், அதையடுத்து சமுத்திரகனி இயக்கயிருந்த கிட்ணா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் அமலாபால். அதோடு, தனுசுடன் 3 படத்தில் கமிட்டாகி கால்சீட் பிரச்னையால் ஏற்கனவே வெளியேறியிருந்தவர், பின்னர் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
இதற்கிடையே லைலா ஓ லைலா, மிலி போன்ற மலையாள படங்களில் நடிக்கவும் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். இந்த நேரம்தான், தனது காதலரான டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திடீரென்று திருமணம் செய்து கொண்டார் அமலாபால். இந்த நிலையில், தனது கிட்ணா படத்தில் அமலாபாலுக்கு பதிலாக தன்சிகாவை சமுத்திரகனி ஒப்பந்தம் செய்தபோதிலும், மலையாள பட டைரக்டர்களோ அந்த வேடத்தில் அமலாபாலையே நடிக்க வைக்க முடிவு செய்தனர்.
அதனால், திருமணத்திற்கு பிறகு அப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அமலாபால். இதில் மிலி படத்தில் வெயிட்டான வேடத்தில் நடித்து வரும் அமலாபாலை, தொடர்ந்து நடிக்க வைக்க சில மலையாள டைரக்டர்கள் அமலாபாலை அணுகி வருகிறார்களாம். ஆனால், அவரோ, இப்போதைக்கு புதிய படங்களுக்கான கதை கேட்கும் நிலையில் இல்லை. நடித்து வரும் படங்கள் வெளியான பிறகுதான் தொடர்ந்து நடிப்பதா? இல்லை சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்து நடிப்பதா? என்பதை முடிவு செய்வேன் என்று அவர்களை திருப்பி அனுப்பி விட்டாராம்.
அதனால் கைவசம் உள்ள படங்களுக்குப்பிறகு அமலாபால் குடும்பம், குழந்தை குட்டிகள் பெற்றுக்கொள்வதில் இறங்கி விடுவார் என்றே தெரிகிறது.