தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் |
அஜித்தின் செயல்கள் பல பேருக்கு முக்கியமாக இளம் நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கின்றன. அதை அவர்கள் பின்பற்றவும் செய்கின்றனர். தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கும், படம் தொடர்பான எந்த விழாவுக்கும் வருவதில்லை என்பதை அஜித் தன்னுடைய கொள்கையாக வைத்திருக்கிறார். அதையும் சில நடிகர்கள் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். ஜெய்யுக்கு ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராது, சினிமா விழாவுக்கு வரும்போது யாராவது ஆங்கிலத்தில் பேசினால் பதில் சொல்லமுடியாமல் வியர்த்துக்கொட்டும் என்பதால் தன்னுடைய பட விழாவுக்குக் கூட ஜெய் வருவதில்லை. கேட்டால் அஜித் பாலிஸி என்று சீன் போட்டு வருகிறார். இப்போது ஆர்யாவும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார். இவருக்கு ஆங்கிலம் பிரச்சனை இல்லை. குறிப்பிட்ட ஒரு சேனலுக்கு ஆதரவாக இயங்கி வரும் ஆர்யா மற்ற சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்று தீர்மானித்துள்ளார். அவரை வைத்து மீகாமன் படத்தை எடுத்த தயாரிப்பாளர் தன் படத்தின் புரமோஷனுக்காக அனைத்து சேனல்களுக்கும் பேட்டி கொடுக்கும்படி கேட்டுள்ளார். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார் ஆர்யா. அதுமட்டுமல்ல, அவர் நடித்த படங்களின் பத்திரிகையாளர் காட்சி நடைபெறும்போது தியேட்டருக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்துவிட்டுப்போவார். மீகாமன் பத்திரிகையாளர் காட்சிக்கு அழைத்தபோது வர மறுத்துவிட்டாராம். பப்ளிசிட்டி விஷயத்தில் ஆர்யாவின் ஒத்துழைப்பு இல்லாததினால்தான் வசூலில் மீகாமன் படம் பின் தங்கி இருப்பதாக வருத்தப்படுகிறாராம் தயாரிப்பாளர் ஜபக்.