நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது கோலிவுட்டில் இளவட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, தமன், விஜய் ஆண்டனி, அனிருத் ஆகியோர்தான உள்ளனர். ஆனால், இவர்களில் அனிருத் ஐந்தாறு படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். இருப்பினும் அவர் கொடுத்த ஹிட் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.
குறிப்பாக, எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி படங்களின் வெற்றி அவரை ரொம்ப உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதனால் அடுத்தபடியாக அரை டஜன் மெகா பட்ஜெட் படங்களுக்கு ஒப்பந்தமாகி இசையமைத்துக்கொண்டிருக்கிறார். இதன்காரணமாக அவருக்கு முன்பே கோலிவுட்டில் இடம்பிடித்திருககும் சில இசையமைப்பாளர்கள் கடும் பீதியில் இருக்கின்றனர்.
காரணம், அவர்களது ஆஸ்தான டைரக்டர்கள் சிலர் தற்போது அனிருத் பக்கம் திரும்பி நிற்பதுதான். அதனால், தாங்கள் இசையமைக்கும் படங்களின் பாடல்களும் ஹிட்டாகி வருவதாக அவர்கள் பில்டப் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் இணையதளங்களில் தங்களது படப்பாடல்களை எவ்வளவு ரசிகர்கள் பதிவிறக்கம் செயதிருக்கிறார்கள் என்பதை வெளியிடாத அவர்கள், இப்போது தங்களது பாடல்களை பதிவிறக்கம் செய்திருப்பதை பட்டியலிட்டு அதை பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள்.
இந்த விசயத்தில் ஹாரிஸ்ஜெயராஜ், யுவன் ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.