Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்செட் அனுஷ்காவின் அதிரடி ஆக்ஷன்....

25 டிச, 2014 - 12:51 IST
எழுத்தின் அளவு:

'லிங்கா' படத்தின் விமர்சனங்களால் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கூட அதிகம் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த அனுஷ்காவைப் பற்றி அதிகம் விமர்சனங்கள் எழுந்தன. அவருக்குப் பொருத்தமான ஆடைகளையும் அணியவில்லை, நடிப்பிலும் ஸ்கோர் செய்யும் அளவிற்கு பிரமாதமான காட்சிகள் இல்லை என்று அநேகம் பேர் விமர்சனம் செய்திருந்தனர். இது பற்றி ஏற்கெனவே நாமும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். இங்குதான் இப்படி என்று பார்த்தால் தெலுங்கில் 'லிங்கா'வைப் பார்த்தவர்களும் அதே விமர்சனத்தைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவு விமர்சனத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அனுஷ்கா ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாத்தே அதற்குக் காரணம் என அனுஷ்கா நினைக்கிறாராம். 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் 'என்னை அறிந்தால், பாகுபலி, ருத்ரமாதேவி' என ஒரே சமயத்தில் நான்கு படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்ததால் கிடைக்கும் கொஞ்ச நேர ஓய்வில் கூட அவரால் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாம்.


'யோகா'வில் மாஸ்டராக இருக்கும் அனுஷ்காவிற்கு தன்னைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது நிறையவே வருத்தத்தை ஏற்படுத்தி விட்டதாம். அதை உடனடியாகச் சரி செய்யும் முயற்சியில் இறங்கி விட்டாராம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து அனுஷ்கா, 'பாக்மதி' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் தன்னுடைய உடற்கட்டை சரியாகக் காட்ட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். 'லிங்கா' படம் பற்றி எழுந்த விமர்சனங்கள் பற்றி அவர் இதுவரை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், உள்ளுக்குள் வருத்தத்தில்தான் இருக்கிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ருத்ரமாதேவி' படத்தின் ஒரு புகைப்படம் அனுஷ்காவிற்கு வாங்கித் தந்த பெயரில் கூட 'லிங்கா' படம் கொஞ்சமும் வாங்கித் தரவில்லையே என்று நினைக்கிறாராம். இதைப் பற்றியெல்லாம் அவரும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. இப்போது அதைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதாலும் அவர் அமைதியாக இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in