ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
இளம் ஹீரோக்களில் வெற்றிப்படம் கொடுக்காமலே ரேஸில் ஓடிக்கொண்டிருப்பவர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கோ என ஜீவா நடித்து வெற்றியடைந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வரிசையாக தோல்விப்படங்களில் நடித்ததால் ஜீவாவுக்கு தற்போது மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அவரை நம்பி பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட யான் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. யான் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் மொத்தமும் தொலைந்துபோனது. தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதை வெளிப்படையாக வெளியே சொன்னதோடு, நஷ்டத்துக்கு ஜீவாவும் முக்கிய காரணம் என்பதை கூறினார்கள். யான் படத்தின் படுதோல்விக்குப் பிறகு ஜீவாவை ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. ஜீவாவை வைத்து புதிய படங்கள் தயாரிக்க ஒருவரும் முன் வரவில்லை, அதுமட்டுமல்ல, அவருக்கு ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்திருந்த மைக்கேல் ராயப்பன் போன்ற தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் போனால் போகட்டும்...ஜீவாவை வைத்து படம் எடுத்து மேலும் நஷ்டமடைய வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டனர்.