விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கவுரவம் படத்திற்கு பிறகு ராதா மோகன் இயக்கும் படம் உப்புகருவாடு. இதில் கருணாகரன் ஹீரோவாக நடிக்கிறார். ஆடாம ஜெயிச்சோமடா படத்துக்கு பிறகு அவர் ஹீரோவாக நடிக்கும் படம். அவருக்கு ஜோடியாக அட்டகதத்தி நந்திதா நடிக்கிறார். காதல், காமெடி கலந்த ஜாலியான படம். ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கதை.
"நந்திதா நடித்து வரும் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவரது சமீபத்திய படங்களில் நல்ல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உப்புக்கருவாடு கதைக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்து நடிக்க வைக்கிறேன். இது நந்திதாவுக்கு சவாலான ஒரு கேரக்டராக இருக்கும்" என்கிறார் ராதாமோகன்.