மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த லிங்கா திரைப்படம் மூலம், தமிழில் அறிமுகமான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்காவின் நடிப்பிற்கு, ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.
சோனாக்ஷிக்கு, இதுதான் தமிழில் முதல் படம் என்றாலும், அவரது நடிப்பு, வசன உச்சரிப்பின் போது அவரது முகபாவனைகள் போன்றவைகள், பல படங்களில் நடித்து அனுபவம் பெற்ற நடிகையைப்போன்று உள்ளதாக பலர் பாராட்டியுள்ளனர். படத்தில், அவரது நடிப்பில் செயற்கைத்தனமே இல்லை என்றும் கூறியுள்ளனர்.
ரஜினியுடன் ஒருமுறையாவது சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்ற கனவில் பல்வேறு நடிகைகள் இருக்க, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே, சோனாக்ஷி, ரஜினியுடன் நடித்திருப்பதை, சமூக வலைதளங்களில், பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். லிங்கா படத்திற்கு பிறகு, சோனாக்ஷி்க்கு, தமிழிலேயே பல்வேறு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.தொடர்ந்து அவர் தமிழில் நடிப்பாரா என்பதை, சோனாக்ஷி தான் சொல்ல வேண்டும்....