மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல இசை அமைப்பாளர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரன் இன்று (டிச 20) பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். இன்று மாலை 3 மணிக்கு மறைமலை நகரில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் அவர் முன்னிலையில் கங்கை அமரன் கட்சியில் இணைகிறார்.
முன்னதாக நேற்று (டிச 19) கங்கை அமரன் பாரதிய ஜனதா கட்சியில் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் ஆகியோரை சந்தித்து பாரதிய ஜனதாவில் சேரும் தன் திட்டத்தை கூறினார். அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்கவே இன்று சேர்கிறார்.
இளையராஜா குடும்பத்துக்கு அரசியல் புதிதல்ல. இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரின் மூத்த அண்ணன் பாவலர் வரதாசன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தார். இளையராஜா தன் அண்ணனுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பிரச்சார பாடல்களை பாடியவர். காலம் அவரை இசைஞானியாகவும், தேர்ந்தெடுத்த ஆன்மீக வாதியாகவும் மாற்றியது. தற்போது அவர் தம்பி கங்கை அமரன் அரசியலில் நுழைந்திருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா சென்னை வரும்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சினிமா புள்ளி ஒருவரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற அசைன்மெண்ட் இங்குள்ள நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டதாம். அவர்கள் ரஜினி முதல் கவுண்டமணி வரை முயற்சி செய்ததில் கடைசியில் கிடைத்தது கங்கை அமரன்தானாம்.