மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அரிமா நம்பி படத்தில் சரக்கு அடிப்பது போன்று நடித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் ப்ரியாஆனந்த். ஆனால் அதையடுத்து, அவர் நடித்த இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. அதனால் அவரது பெயரளவில் இருந்த பரபரப்பு தற்போது அடங்கி விட்டது.
கைவசம் உள்ள வை ராஜா வை படம் ஓடினால்தான் ப்ரியாஆனந்த் மார்க்கெட்டில் தாக்குப்பிடிப்பார் என்கிற நிலை உருவாகியிருககிறது. இதே படத்தில் டாப்சியும் இருந்தாலும் அவர் ஒரு கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருப்பதால், தன்னை எப்படியேனும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பாடல் காட்சிகளில் இதுவரையில்லாத அளவுக்கு தாராளம் காட்டி நடித்துள்ளாராம் ப்ரியா ஆனந்த்.
இதற்கு முன்பு நடித்த படங்களில் நானும தமிழ் பொண்ணுதான். அதனால் அதிக கிளாமர் காட்டி நடிக்க மாட்டேன் என்று செண்டிமென்டாக பேசி அடக்கி வாசித்து வந்த ப்ரியாஆனந்த், இனிமேல் அதையெல்லாம் ஏறக்கட்டி விட்டு, கவர்ச்சிக்கொடியை வேகமாக பறக்க விடப்போகிறாராம். அதனால் வை ராஜா வை படத்தில் கூடுதல் கவர்ச்சிக்கு நான் பிளளையார் சுழி போட்டிருக்கிறேன். இதையடுத்து, புதிய படங்களில் கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தப்போகிறேன் என்று கோடம்பாக்க டைரக்டர்களிடம் தொடை தட்டி வருகிறார்.