மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்னை திரைப்பட விழாவும் ஒன்று. சென்னையில் செயல்படும் இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் இந்த சென்னை திரைப்பட விழா நடக்கிறது. இந்தாண்டு 12வது சர்வதேச திரைப்பட விழா இன்று(டிச.,18ம் தேதி) துவங்கியது. தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விழாவை துவக்கி வைத்தார். இந்த ஆண்டு, 12-ஆவது சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கி 25-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஈரான் உள்பட 87 நாடுகளைச் சேர்ந்த 171 படங்கள் திரையிடப்படுகிறது.
இதுதவிர போட்டி பிரிவில் முண்டாசுப்பட்டி, வெண்ணிலா வீடு, குற்றம் கடிதல், பண்ணையாரும் பத்மினியும், சிகரம் தொடு, சலீம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், மெட்ராஸ், சதுரங்க வேட்டை, பூவரசம் பீ பீ, தெகிடி, என்னதான் பேசுவதோ உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் மோதுகிறது. இந்த படங்கள், உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், பைலட் தியேட்டர்களிலும், ரஷ்யன் கலாச்சார மையத்திலும் திரையிடப்படுகிறது.
துவக்க விழாவில் நடிகை கனிகா, சரத்குமார், இயக்குநர் மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.