ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் புதிது புதிதாக பல வழிகளை நம்மவர்கள் கண்டு பிடித்து வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு படத்தைப் பற்றி முன்னோட்டமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும்போதோ, அல்லது படத்தின் இடைவேளையின் போது விரைவில் வெளிவர இருக்கும் படத்தின் டிரைலரைப் போடுவார்கள். அதன் பின் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் வந்த பிறகு, அதில் டிரைலரைப் போட ஆரம்பித்தார்கள். கடந்த சில வருடங்களாக யூடியூப் வீடியோ இணையதளம் பிரபலமான பிறகு அதில் டிரைலர்களைப் போட ஆரம்பித்தார்கள்.
அந்த டிரைலரையும் சுருக்கி டிரைலருக்கு முன்னதாக ஒரு டீசரை உருவாக்கி அதை யூடியூபில் போட ஆரம்பித்தார்கள். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக, எந்த வசனமும் இல்லாமல் வெறும் பின்னணி இசையை மட்டும் வைத்து உருவாக்கப்படுவதுதான் டீசர் என்றார்கள். இவற்றைத் தவிர படத்தின் முதல் பார்வை என்று நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரத்தையே படத்தின் முதல் பார்வை எனப் பெயரிட்டு வெளியிட ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பது 'மோஷன் போஸ்டர்'.
படத்தின் நாயகன் புகைப்படத்தையும், படத்தலைப்பையும் மட்டுமே வைத்து அதில் சிறியதாக ஒரு அனிமேஷனை உருவாக்கி அதை நகரும்படி செய்வதற்குப் பெயர்தான் இந்த 'மோஷன் போஸ்டர்'. ஏற்கெனவே, “கத்தி, லிங்கா” ஆகிய மோஷன் போஸ்டர்கள் யூடியூபில் புது டிரெண்டை உருவாக்கியிருக்க, நேற்று மாலை சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்கும் 'காக்கி சட்டை' படத்தின் மோஷன் போஸ்டரை யு டியூபில் வெளியிட்டார்கள். இன்று காலையில் விடிந்த பிறகு எழுந்து பார்த்தால் அந்த வீடியோவை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அந்த மோஷன் போஸ்டரில் சிவகார்த்திகேயனை ஏகத்துக்கும் பில்ட்-அப் செய்திருக்கிறார்கள். தமிழ் சினிமா எங்கேயோ போயிட்டிருக்கு....