ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
1978ல பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரில்லர் படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்திருந்தார். கே.பாக்யராஜ் வசனம் எழுதிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றியடைந்த அப்படத்தின் பாதிப்பு இப்போதுவரை பல திரில்லர் படஙகளில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப்போவதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் கூறி வருகிறார். ஆனால் அவர் அந்த கதையை சில முன்னணி ஹீரோக்களை சந்தித்து சொன்னபோது, யாரும் அவருக்கு கால்சீட் கொடுக்கவில்லை. அதனால் சிகப்பு ரோஜாக்கள் -2 என்ற பெயரில் தான உருவாக்கிய ஸ்கிரிப்ட்டை கிடப்பில் போட்டிருந்தார் மனோஜ்.