மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படம் ஜென்டில்மேன். அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். அதையடுத்தும் அவர் இயக்கிய காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ் என பல படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான், எந்திரனைத் தொடர்ந்து தற்போது அவர் இயக்கி வரும் ஐ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த அனுபவம் குறித்து ஷங்கர் கூறுகையில், நானும், ரகுமானும் இணைந்த படங்களில் பாடல்கள் எப்போதுமே பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது. இப்போது ஆங்கில படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், ஐ படத்தின் பின்னணி இசை வேலைகளிலும் ஈடுபட்டிருககிறார். இன்னொரு பக்கம் லிங்கா படத்தின் பின்னணி வேலைகளும் நடக்கிறது. மேலும், எத்தனை பிசியாக இருந்தாலும் எனது எல்லா படங்களையும் போலவே இந்த படத்திற்கும் சிறப்பான இசையை கொடுத்து வருகிறார் என்று கூறும் டைரக்டர் ஷங்கர், நானும் ஏ.ஆர்.ரகுமானும், தொழில்ரீதியாக டைரக்டர், இசையமைப்பாளர் என்று பழகினாலும் எஙகளுக்கிடையே நல்லதொரு நட்பும் இருந்து வருகிறது.
அந்த வகையில், ஜென்டில்மேன் படத்தில் இணைந்த எங்கள் நட்பு கடந்த 21 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஒரு சிறிய கீறல்கூட விழாமல் இப்போது வரை பழகி வருகிறோம். அப்படிபட்ட எங்களது ஆத்மார்த்தமான நட்பை நான் பொக்கிஷம் போன்று பாதுகாத்து வருகிறேன் என்கிறார் ஷங்கர்.