'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தலைமுறைகள் என இடைவெளிவிடாமல் நடித்து வந்தார் சசிகுமார். கடைசியாய் அவர் கதாநாயகனாக நடித்தது பிரம்மன் படத்தில்தான். அந்தப் படத்தின் படு தோல்வி காரணமோ என்னவோ அப்படத்துக்குப் பிறகு ஆளையே காணோம். பின்னர் பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்தி வந்தது. அதில் கரகாட்டக் கலைஞராக நடிப்பதால் கரகம் ஆடி பயிற்சி பெற்று வருகிறார் என்று சொல்லப்பட்டது. பிறகு டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டதாகவும் திரையுலகில் தகவல் பரவியது.
தாரை தப்பட்டை படத்தின் தற்போதைய நிலைதான் என்ன?
சசிகுமாரை வைத்து தற்போது தாரை தப்பட்டை படத்தை இயக்க உள்ள பாலா அதற்கு முன் தனது பி.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. இதன் பிறகே தாரை தப்பட்டை படத்தை தொடங்க உள்ளாராம்.
பிசாசு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த பாலாவிடம் தாரை தப்பட்டை படத்தைப் பற்றி கேட்டோம். நவம்பர் 26 அன்று படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிவித்தார். அதோடு, இனி வருடத்திற்கு ஒரு படத்தை இயக்கவும், மூன்று படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார் பாலா. அகலக்கால் வச்சுட்டு அப்புறம் அவஸ்தைப்படாதீங்க பாலா!