மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சின்னத்திரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இப்போது இவனுக்கு தண்ணியில கண்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சின்னத்திரை நடிகர் தீபக் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் நேகா ஹீரோயின். "இந்த படத்தை டாஸ்மாக் குடிகாரர்களின் படமாக நினைக்கிறார்கள் அது தப்பு. இது ஒரு டி.வி.தொகுப்பாளனின் கதை" என்கிறார் இயக்குனர் சக்திவேல்.
அவர் மேலும் கூறியதாவது: கதைப்படி உள்ளூர் கேபிள் சேனலில் நிகழ்ச்சி நடத்துகிறவர் தீபக். உனக்கு நிறைய திறமை இருக்கு சென்னைக்கு போனால் டி.வியில் நிகழ்ச்சி நடத்தி பெரிய ஆளாகலாம் என்று நண்பர்கள் அனுப்பி வைக்கிறார்கள். சென்னைக்கு வரும் தீபக் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளனாக என்ன கஷ்டப்படுகிறார் என்பதை காமெடியாக சொல்கிறோம்.
ஒரு நாள் டாஸ்மாக்குல உட்கார்ந்து தண்ணியடிக்கும்போது ஒரு சின்ன பிரச்சினை வந்துவிடுகிறது. அந்த பிரச்சினை தீபக் வாழ்க்கையையே புரட்டிப் போடுது. இதுக்காகத்தான் படத்துக்கு இவனுக்கு தண்ணில கண்டமுன்னு தலைப்பு வச்சிருக்கோம். காமெடி படத்தை கமர்ஷியலா தரப்போறோம் என்கிறார் சக்திவேல்.