மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மான் கராத்தே வெற்றிப்படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தற்போது கயல் படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், அடுத்த சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தை அடுத்து விமல் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளார் மதன். படத்தின் பெயர் மாப்பிள்ளை சிங்கம். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
தூங்கா நகரம், கலகலப்பு ஆகிய படங்களில் ஏற்கனவே ஜோடி சேர்ந்த விமல்-அஞ்சலி, மாப்பிள்ளை சிங்கம் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
இப்படத்தை ராஜசேகர் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.
டிசம்பர் 25 அன்று கயல் படம் வெளியாகிறது. அதன் பிறகு மாப்பிள்ளை சிங்கம் படத்துக்கு பூஜை போட உள்ளனர்.