மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீப காலமாக திரைப்படங்களின் மூலமும், டுவிட்டரில் சொல்லும் கருத்துக்கள் மூலமும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் அவர் வெளியிட்ட 'ஸ்ரீதேவி' படத்தின் போஸ்டர்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதன் பின் அந்தப் படத்திற்கு தன்னுடைய பெயரையும் வைக்கக் கூடாதென நடிகை ஸ்ரீதேவியும் ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ராம்கோபால் வர்மா இயக்கி சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஐஸ் க்ரீம்' என்ற படத்திலும் நாயகி நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது. அதன் பின் படம் வெளியான பின் பார்த்தால் அப்படி ஒரு காட்சியே படத்தில் இல்லாமல் போனது. விளம்பரத்திற்காக ராம்கோபால் வர்மா அப்படி ஒரு செய்தியைப் பரப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்கள்.
இப்போது 'ஐஸ் க்ரீம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த மாதம் 7ம் தேதியன்று வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தில் தமிழில் 'வல்லினம்' படத்தில் நாயகியாக நடித்த மிருதுளா, நவீனா என்ற பெயருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பல கவர்ச்சிப் படங்கள் வெளியாகி ஏற்கெனவே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அடுத்ததாக ராம்கோபால் வர்மா உருவாக்கி வரும் 'ஸ்ரீதேவி' படமும் ஏற்கெனவே சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் 'ஐஸ் க்ரீம் 2' படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னும் வெளியான பின்னும் புதிதாக ஏதாவது சர்ச்சைகளை உருவாக்கலாம் எனவும் சொல்கிறார்கள். அந்த சர்ச்சையை ராம்கோபால் வர்மாவே உருவாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.