'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஸ்ரீபிரவீன் என்ற புதுமுகம் இயக்கி வரும் படம் போர்க்குதிரை. சைதன்ய கிருஷ்ணன் என்பவர் ஹீரோ. சாந்தினி ஹீரோயின். நாகி நீடு என்பவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இது சுப்பிரமணியபுரம் பாணியிலான நேட்டிவிட்டி கதை. 1980 களில் உசிலம்பட்டி பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட திரைக்கதை.
"அன்பும், காதலும் நிறைந்திருந்த 80களில் குரோதமும், துரோகமும் நிறைந்திருந்தது. அதனை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். பரத் வி.எம்.நந்தன் இசை அமைத்திருக்கிறார். விஸ்வா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கிராமத்தின் மண்மணமும், வாழ்க்கையும் இப்போது சிதைந்து போயிருக்கிறது. சிதையாமல் இருந்த காலத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். இதற்காக 80களின் உடைகள், வாகனங்கள், பேச்சு வழக்கு என எல்லாவற்றிலும் மெனக்கெட்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஸ்ரீபிரவீன்.