மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபத்தில், விஷ்ணு - நந்திதா நடித்து, ரஜினி உள்ளிட்ட பலராலும் பாராட்டு பெற்ற படம் ''முண்டாசுப்பட்டி''. இப்படத்தின் இயக்குநரான ராமிடம், அடுத்த படம் பற்றி நாம் கேட்டபோது அவர் அளித்த பதில்... நான் எடுத்த குறும்படம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானது. அதைத்தான் பிறகு முண்டாசுப்பட்டி என்று படமாக்கினேன். மூட நம்பிக்கையோடு காமெடி கலந்த அந்தப்படத்திற்கு பலரது பாராட்டும் கிடைத்தது. எனது அடுத்தப்படத்திற்கு நான் அவசரப்படவில்லை. முதலில் நல்ல கதையை ரெடி பண்ணி, பிறகு டயலாக் உள்ளிட்ட படத்தின் எல்லா விஷயங்களையும் முடித்த பின்னர் எனது அடுத்தக்கட்ட வேலைகளை தொடருவேன். இந்தமுறை கொஞ்சம் சீரியஸான படத்தை இயக்க முயற்சி எடுத்துள்ளேன். முதலில் என்னை முழுமையாக தயார் செய்த பிறகு தான் தயாரிப்பாளரிடம் செல்வேன். அப்போது தான் எனக்கும் கொஞ்சம் டென்சன் இல்லாமல் இருக்கும், நான் நினைத்ததையும் கொண்டு வர முடியும் என்கிறார் ராம்.