மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தனுசுக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி பெரிய ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து மீண்டும் தனுஷின் மார்க்கெட்டில் பரபரப்பு தொற்றிக்கொள்ள, அனேகன் படத்தையும் புதிய எனர்ஜியுடன் முடித்து விட்டார். அப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ள தனுஷ், அந்த படமும் தனக்கு இன்னொரு மெகா ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்.
அதேபோல் இந்தியில் தனது நடிப்பில் வெளியான ராஞ்சனா 100 கோடி வசூலித்ததால் தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வரும் ஷமிதாப் படமும், அந்த படத்தையும் வசூலில் மிஞ்சி விட வாய்ப்பிருக்கிறது என்று இன்னொரு எதிர்பார்ப்பையும் விதைத்துள்ளார்.
இந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மீண்டும் தனுசுக்காக ஒரு கதை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறாராம். காதல், காமெடி, ஆக்சன், செண்டிமென்ட் என உருவாகும் அந்த கதையின் ஒன்லைனை கேட்டதுமே டபுள் ஓ.கே சொல்லி விட்டாராம் தனுஷ். அதனால் இந்தமுறையும தனுஷின் நம்பிக்கையை காப்பாற்றி விட வேண்டும் என்று கதை விவாதத்தில் தீவிரமடைந்திருக்கிறார் வேல்ராஜ்.
இதற்கிடையே, வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த நிலையில், புதிய படத்தில் கயல் ஆனந்தி நடிப்பதாக செய்தி பரவியிருக்கிறது. ஆனால், இந்த செய்தியை மறுக்கும் வேல்ராஜ், அந்த படத்தில் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மொத்த ஸ்கிரிப்ட் வேலைகளும் முடிந்த பிறகுதான் கதாநாயகி பற்றி முடிவெடுக்கப்படும் என்கிறார்.