'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியின் இரண்டாவது படமாக உருவாகி வரும் 'கத்தி' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டன. தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகள், கேரளாவில் 200 திரையரங்குகள், மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் என இப்படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒரு சமுதாயப் பிரச்சனையை இயக்குனர் கதையாக உருவாக்கியிருப்பதும், விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதும் இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்களைத் தவிர அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என்ற ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்கள் கமர்ஷியலாகவே இருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சனையை மையப்படுத்தியே கதை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு, கதை உரிமை கேட்டு வழக்கு என பலப் பிரச்சனைகளை சமாளித்து, தற்போது படம் அடுத்த வாரம் சென்சாருக்காக காட்டப்பட இருக்கிறதாம். இன்றோ அல்லது நாளையோ படத்தின் புதிய டிரைலரையும் வெளியிட உள்ளார்களாம். தீபாவளி வெளியீட்டுப் போட்டியில் முன்னணியில் நிற்கும் படமாக 'கத்தி' அமைந்துள்ளது.