மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என மிஷ்கின் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வியடைந்த காரணத்தினால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணராத இயக்குநராக அவர் இருந்ததால் திரையுலகில் மிஷ்கின் பற்றி நெகட்டிவ்வான அபிப்ராயமே உள்ளது.
இதன் காரணமாக பட வாய்ப்பு கிடைப்பதில் மிஷ்கினுக்கு பிரச்சனையும் பெரும்தடையும் ஏற்பட்டது.
மிஷ்கின் தன் ஊர்க்காரர் என்பதால், அந்த பாசத்தில் மிஷ்கினை அழைத்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்,பாலா.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நாகா. இவர் லண்டனில் ஃபிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு தமிழ்சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக, அதாவது பிசாசாக நடித்திருப்பவர் புதுமுகம் பிரயாஹா.
பிசாசு படம் வழக்கமான பேய்ப் படங்களைப் போல் இருக்காதாம்.
அன்பும், காதலும் நிறைந்த ஒரு நல்ல பேயின் கதையைத்தான் இப்படத்தில் காட்டியிருக்கிறாராம் மிஷ்கின்.
பாலாவின் தயாரிப்பாக இருந்தாலும் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் பிசாசு படத்தை இயக்குவதால் சிக்கனமாக செயல்பட்டு வருகிறார் மிஷ்கின்.
எந்தளவுக்கு?
பெரும்பாலும் தன் படங்களுக்கு பல லட்சங்கள் சம்பளம் கொடுத்து இளையராஜாவைப் பயன்படுத்தும் மிஷ்கின் இப்படத்தில் சம்பளமே கொடுக்காமல் அரோல் குரோலி எனும் புதிய இசையமைப்பாளரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் போடப்பட்ட செட்டில் ஏறக்குறைய முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார் மிஷ்கின்.
பிசாசு படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்காக ஹாங்காங்கிலிருந்து புரூஸ் லீ படங்களில் பணியாற்றிய டோனி எனும் ஸ்டன்ட் இயக்குனரை வரவழைத்து படமாக்கியிருக்கிறார்கள். இந்த க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்படும்போது தயாரிப்பாளர் பாலாவும் உடனிருந்து பிசாசு படக்குழுவினரை வாழ்த்திவிட்டுச் சென்றாராம்.
பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது.