'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அங்கனாராய். வத்திக்குச்சி, ரகளபுரம், கபடம், மேகா, படங்களில் நடித்துள்ளார். தற்போது மேஜர் ரவி இயக்கும் பிக்கெட் 43 என்ற மலையாளப் படத்திலும், துனியா விஜய்யுடன் கோப்ரா என்ற கன்னடப் படத்திலும் நடிக்கிறார். விரைவில் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், பிரெஞ்சு, பஞ்சாபி, பெங்காலி என 7 மொழிகள் தெரிந்த ஒரே நடிகையும் அங்கனாராய்தான்.
அங்கனாராய் கபடம் படத்தில் கவர்ச்சியாக நடித்தார். மேகா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: கபடம் படத்தின் கதைப்படி அப்படித்தான் நடிக்க முடியும். வேண்டுமென்று கிளாமராக நடிக்கவில்லை. மேகா படத்தின் நர்ஸ் கேரக்டர் பிடித்திருந்ததால் நடித்தேன். இனி இதுபோன்ற சிறிய கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். அடுத்து எனது சொந்த மொழியான பெங்காலியில் நடிக்க இருக்கிறேன்.
நான் தீபிகா படுகேனோ சாயலில் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நானும் அவரும் நடிக்க வருவதற்கு முன்பு பேஷன் ஷோக்களில் ஒன்றாக கேட்வாக் போட்டிருக்கிறோம் என்கிறார் அங்கனாராய்.