'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
நடிகை ஹன்சிகா 25 அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் அதேபோல சமந்தா குழந்தைகளுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ) ஒன்றை நடத்துகிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மனதிருப்திக்காக இதனை நடத்துகிறேன். உடனடி மருத்து உதவிகள் தேவைப்படும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவும் அமைப்பு இது. இதற்காக அரசு அனுமதியுடன் ஒரு டிரஸ்ட் தொடங்கியிருக்கிறேன். டிரஸ்ட்டை போர்ட் மெம்பர்கள் நடத்துறாங்க. அதுல இரண்டு டாக்டர்களும் உறுப்பினர்களாக இருக்காங்க.
நான் நடிச்சு சம்பாதிக்கிற காசை இந்த டிரஸ்ட்டில் சேர்ப்பது இல்லை. கடை திறப்பு விழா, கலை நிகழ்ச்சிகளில் ஆடுகிற சம்பளம், விளம்பர படங்கள் மூலம் வருகிற வருமானம் ஆகியற்றை டிரஸ்ட்டுக்கு கொடுத்துவிடுகிறேன். இதுதவிர யாராவது டிரஸ்ட்டுக்கு நன்கொடை கொடுத்தால் அதையும் வாங்கிக் கொள்கிறேன். சில ஆபரேஷன்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதை என்னோட பேஸ்புக்குல போடுறேன். என் ரசிகர்கள் பணத்தை குவிச்சிடுறாங்க. என்னோட புகழை இதற்கு பயன்படுத்திக்கிறேன் என்கிறார் சமந்தா.