'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் கமலஹாசன் இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், பகுத்தறிவு சிந்தனைவாதி. அதனால் நாத்திகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார், கமல். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கெளதமி நடிக்க மலையாளம் த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார்.
ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், தூத்துக்குடி பகுதிகளில் நடந்து வந்த பாபநாசம் படப்பிடிப்பு தற்போது நாங்குனேரி பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தில் சில ஆன்மீக காட்சிகளும் உள்ளதாம். அதனால் அதை படமாக்க அங்கு அமைந்துள்ள ஸ்ரீவானமாமலை மடத்தில் உள்ள பெருமாள் கோயில் சரியாக இருக்கு என்று முடிவு செய்தாராம் கமல்.
அதையடுத்து, அந்த மடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு, ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுரை ஜீயரை சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டாராம். மடாதிபதியும் அனுமதி வழங்கினாராம். 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த கமலின் நெற்றியில் பெரிய விபூதி பட்டை போட்டிருந்தாராம்.
நாத்திகவாதி கமல், மடாதிபதியை சந்தித்ததோடு, நெற்றியில் விபூதி அணிந்து வந்ததால், கமல் ஆன்மீகத்துக்கு மாறி விட்டதாக நாங்குநேரி பகுதிகளில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.