விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
சுந்தர்.சி., விஷால் இணைந்த 'மதகஜராஜா' படம் மாதக்கணக்கில்.. இல்லை.. இல்லை.. வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது. அந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை! அப்படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டதால், இனியும் மதகஜராஜா படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை.
இந்நிலையில்தான், அடுத்ததாக 'ஆம்பள' என்ற படத்தில் சுந்தர்.சி., விஷால் இருவரும் இணைந்திருக்கிறார்கள்!
தனது 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் மூலம் தற்போது 'பூஜை' படத்தை தயாரித்து, நடித்து வரும் விஷாலே 'ஆம்பள' படத்தையும் தயாரிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் ஓரிரு நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்திலிருந்து துவங்கவிருக்கிறது.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.
படையப்பாவில் ஏற்று நடித்ததைப் போன்ற, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதாவது ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா விஷாலுக்கு ஜோடியாம் இவர்.
இவர்களுடன் நடிகை கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் 'அன்பே சிவம்', வின்னர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் கிரண்.