ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
சித்தார்த்த நடித்த உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன். அடுத்து பரபர ஆக்ஷன் படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். படத்தின் பெயர் பொடியன். இந்த தலைப்பு வேறொருவரிடம் இருக்கிறது அதனை வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பொறியாளன் படமும் வெளியாக இருக்கிறது.
இதுபற்றி அவர் கூறியதாவது: உதயம் என்.எச் 4க்கு முன்பே நான் எழுதிய கதைதான் பொறியாளன். அதுதான் என் முதல் படமாக வந்திருக்க வேண்டும். பொறியாளனுக்கு தயாரிப்பாளர் கிடைத்ததும் நான் என் அடுத்த படத்தில் இறங்கிவிட்டேன். அதனால் என் நண்பன் தாணுகுமார் இயக்கட்டும் என்று தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டேன்.
இப்போது ஜெய்யை வைத்து அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டேன். எனது சொந்த ஊரான வாலாஜா பேட்டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். ஒரு பெரு நகரத்துக்கு இணையான ஆக்ஷன் லைஃப் சிறு நகரத்திலும் இருக்கிறது என்பதை காட்டுகிறேன். கதைக்கு பொடியன் என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். அதை புதுப்பிக்காமல் போய்விட்டதால் வேறொருவரிடம் இருக்கிறது. ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது.