மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் டிவி நடத்திய ஒரு விருது விழாவின்போது, நீங்கள் தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவரை கடத்த நினைத்தால் யாரை கடத்துவீர்கள்? என்று விஜயசேதுபதியைப் பார்த்து தொகுப்பாளர்கள் கேட்டபோது, சிறிதும் யோசிக்காமல் நயன்தாரா என்று சொன்னார். அதோடு, அவரை கடத்த காரணம் என்ன? என்று கேட்டபோது, செம அழகு என்றார்.
அப்படி சொன்ன விஜயசேதுபதி இப்போது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறாராம். இந்த படத்தில் தனுசும் நடித்தாலும், விஜயசேதுபதிக்கும் முககிய வேடமாம். அதோடு, நயன்தாராவுடன் அவருக்கு பாடல் காட்சிகளெல்லாம் உள்ளதாம்.
தான் தயாரித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்த தனுஷ், அடுத்தபடியாகவும் அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கயிருந்தவர், விஜய் டிவி விழாவில் மேடையிலேயே நயன்தாராவை கடத்தப்போவதாக விஜயசேதுபதி சொன்னபோதுதான். இவரையும், நயன்தாராவையும் ஒரு படத்தில் இணைக்க வேண்டும் என்ற யோசனையே தனுசுக்கு வந்ததாம்.
அதையடுத்து, அவர் அவர்களை தொடர்பு கொண்டபோது உடனே கால்சீட் கொடுத்து விட்டார்களாம். அந்த படத்தை, சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறாராம். படத்துக்கு நானும்தான் என்று டைட்டீல் வைத்துள்ளார்களாம்.