மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, அதன் சார்பில் தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார் விஷால். பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களை, ஹரி இயக்கத்தில் பூஜை படத்தை தயாரித்து நடித்து வருகிறார். பூஜை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்திருப்பதாக விஷால் தரப்பு கூறி வருகிறது. ஆனால் பூஜை படத்தின் ஆடியோ ரைட்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு விலைபோகவில்லை. எனவே கடுப்பான விஷால், விஷால் சவுண்ட் ஃபேக்டரி என்ற பெயரில் ஆடியோ கம்பெனி ஒன்றை துவங்கிவிட்டார்..
இந்த கம்பெனியின் முதல் வெளியீடாக, விஷால் தற்போது நடித்து, தயாரித்து வரும் பூஜை படத்தின் ஆடியோ வெளிவரவிருக்கிறது. ஹரி இயக்கி வரும் பூஜை படத்தில் விஷால் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். குடந்தையில் தொடங்கியது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது. பூஜை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் விஷால்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் ஆடியோ ரைட்ஸ் விற்பனையில் பிரச்சனை ஏற்பட்டதால் சொந்த ஆடியோ கம்பெனியை தொடங்கினார் தனுஷ். இப்போது நடிகர் தனுஷை தொடர்ந்து விஷாலும் ஆடியோ கம்பெனியை துவங்கியுள்ளார்.
அடுத்து எந்த நடிகர் ஆடியோ கம்பெனி துவங்கப்போகிறாரோ?