Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலைஞர் அரசை பயன்படுத்துங்கள்! திரையுலகிற்கு குஷ்பு அட்வைஸ்

21 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

தமிழ் பட உலகுக்கு கலைஞர் அரசு பல நன்மைகளை செய்து இருக்கிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். எஸ்.வி.சோலைராஜா தயாரித்து, இயக்கியிருக்கும் படம் `நீயும் நானும்'. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை `பிலிம்சேம்பர்' தியேட்டரில் நடந்தது. பாடல்களை, நடிகை குஷ்பு வெளியிட, பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பெற்றுக்கொண்டார். டிரைலரை பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பேசியதாவது:-

நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால், படம் தயாரிப்பதில் உள்ள கஷ்டங்கள் எனக்கு தெரியும். திரையுலகம் ஒரு குடும்பம் போன்றது. ஒருவர் மீது ஒருவர் பழிபோடக்கூடாது. அப்படி பேசினால், பொதுமக்கள் மத்தியில், சினிமாவில் இருப்பவர்கள் மீது மரியாதை குறைந்துவிடும். சினிமாவில் உள்ள பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். கலைஞரின் அரசு, தமிழ் பட உலகுக்கு பல நன்மைகளை செய்து இருக்கிறது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வடநாட்டில் இருந்து வரும் நடிகைகள், இந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எவ்வளவு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக தமன்னா இருக்கிறார். மிக குறுகிய காலத்தில் அவர் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறு குஷ்பு பேசினார். விழாவில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், அழகன் தமிழ்மணி, டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் பாண்டியராஜன், கவிஞர் பிறைசூடன், படத்தின் நாயகன் சஞ்சீவ், இசையமைப்பாளர் ஸ்ரீராம் விஜய் உள்ளிட்டோரும் பேசினார்கள். முடிவில் டைரக்டர் எஸ்.வி.சோலைராஜா நன்றி கூறினார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

மனோஜ் - London,ஜமைக்கா
16 பிப், 2011 - 04:05 Report Abuse
 மனோஜ் கலைஞர் உன்னை ''பயன் படுத்துகிறார்''. பதிலுக்கு நீயும் ஏதாவது செய்யத் தானே வேண்டும்.
Rate this:
15 பிப், 2011 - 12:03 Report Abuse
 கொத்தமங்கலம் ரமணி நீ ரொம்ப use பன்றியோ?
Rate this:
குமார் - chennai,இந்தியா
24 நவ, 2010 - 09:34 Report Abuse
 குமார் உனக்கு எதக்கு தேவ இல்லாம பேச்சு. போய் உன் வேலையே பாரு.
Rate this:
ரவி - Chennai,இந்தியா
03 ஆக, 2010 - 04:32 Report Abuse
 ரவி இடத்துக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுவதில் குஷ்புவுக்கு நிகர் குஷ்புதான்!!! மும்பை பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பற்றி எரித்த போது ndtv சார்பில் மோடியை திட்டி பேசியது , தமிழ் நாட்டிலேயே தமிழ் பெண்கள் எப்படி தன்னைப்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று கருத்து சொன்னது எல்லாம் இப்போது நடந்தது போல் இருக்கிறது. ஆனால் இவர் இப்போது இருப்பது திமுகவில். கருணாநிதிக்கு பிரபாகரன் அயல் நாட்டவர். ஆனால் குஷ்பு ஒரு தமிழர்.
Rate this:
MANMATHAN - MALE,மாலத்தீவு
23 ஜூன், 2010 - 19:11 Report Abuse
 MANMATHAN ஹலோ இந்த ஆண்டு கலிங்கர் அடுத்த ஆண்டு ஜெயலலிதா அப்போ என்ன செய்வ நடிக்கிறியா அதோடு இரு சும்மா தேவை இல்லாமல் ஆடிகிட்டு இருந்தால் அது உனக்கே நல்ல இருக்காது எத்தனை பேரு இருக்காங்க முன்னணி நடிகருங்க அவங்கனா உன்ன மாதிரியா இருக்காங்க தேவை இல்லாம சீன போடதே அப்புறம் அதுவே உனக்கு ஆப்பாகிவிடும்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in