விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இளைஞன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு நமீதா ஒப்பந்தம் ஆகி உள்ளார். கவர்ச்சி நிறைந்த அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகைகள் தேர்வு நடைபெற்றது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நமீதா சிபாரிசு செய்யப்பட்டார். அவரை சிபாரிசு செய்தது வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் கருணாநிதி தான். முதல்வரின் இந்த யோசனையை ஏற்ற இளைஞன் பட டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், ஹீரோ பா.விஜய்யும் நமீதாவை முடிவு செய்தனர். பின்னர் நமீதாவிடம் கதை சொல்லி, கதாபாத்திரம் பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். கதையை கேட்ட நமீதாவும் உடனே ஓ.கே., சொல்லி விட்டாராம். தற்போது இளைஞன் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. பட பிடிப்பு குழுவுடன் விரைவில் நமீதாவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.மார்டின் தயாரிக்கும் இளைஞன் படத்திற்கு கலைஞர் கருணாநிதி, கதை வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.