மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் பத்ரி தயாரித்து, இயக்கி உள்ள படம் ஆடாம ஜெயிச்சோமடா. புதிய தலைமுறை காமெடியன்கள் கருணாகரன் (யாமிருக்க பயமே), சிம்ஹா (ஜிகிர்தண்டா), பாலாஜி (சுட்டகதை) ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். விஜயலட்சுமி ஹீரோயின். காமெடி ஹீரோவாக நடித்த சிவா இதற்கு வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் முறைகேடுகள், சூதாட்டங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து யு தணிக்கை குழுவிடம் யு சான்றிதழும் அரசிடம் வரிவிலக்கும் பெற்று விட்டார்கள்.
படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தாலும் இந்த மாதம் 31ந் தேதி பாடல்களை வெளியிடுகிறார்கள். அடுத்த மாதம் 19ந் தேதி படத்தை வெளியிடுகிறார்கள். படத்தின் புரமோஷன்களை திட்டமிட்டு செய்ய பத்ரி முடிவு செய்திருக்கிறார்.
"இப்போது படம் எடுப்பது எளிது. அதனை முறைப்படி திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் கடினம். படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடித்து விட்டோம். இனி அதனை எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லலாம் என்று தீவிரமாக யோசித்து செயல்பட்டு வருகிறோம்" என்கிறார் பத்ரி.