மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தில்லாலங்கடி, ஈரம், காஞ்சனா, ஒஸ்தி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, தடையறத்தாக்க உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருப்பவர் தமன். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 பையன்களில் ஒருவராக அறிமுகமான இவர், தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் அதிரடி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மகிழ்திருமேனி இயக்கிய தடையறத்தாக்க படத்திற்கு இசையமைத்த தமன், தற்போது ஆர்யா இயக்கத்தில் அவர் இயக்கியுள்ள மீகாமன் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியான இசையை தான் கொடுத்திருப்பதாக சொன்ன தமன், இப்படம் என்னை மேல்தட்டு இசையமைப்பாளர் பட்டியலில் சேர்க்கும் என்று கூறினார்.
அதோடு, எனக்கு கிடைத்த இயக்குனர்களில் மகிழ்திருமேனி முக்கியமானவர். அவரது படங்கள் சர்வதேச தரத்தில் உள்ளன. அதனால் இப்போது தமிழில் படங்கள் இயக்கி வரும் அவர், அடுத்து பாலிவுட், ஹாலிவுட் என்று தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்வார். அவரது படங்களுக்கு இசையமைப்பதின் மூலம் நானும் பாலிவுட், ஹாலிவுட் சினிமாவுக்கு செல்வேன் என்று நம்புகிறேன் என்கிறார்.