நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
நாளை (ஜூலை 25) வெளியாகவிருந்த ஜிகர்தண்டா படத்தை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன். ஜூலை 25 வெளியீடு என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துவிட்டு, திடீரென ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததற்கு, தனுஷ்தான் காரணம் என்ற சர்ச்சை எழுந்தது.
தனுஷினால் பொல்லாதவன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கப்பட்டவர்தான் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். அடுத்து ஆடுகளம், நய்யாண்டி என அவருக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து படம் பண்ணிக்கொடுத்த தனுஷ், தான் தயாரித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபாலின் தந்தை வேடத்தில் அவரை நடிக்கவும் வைத்தார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தனுஷுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரை அழைத்த தனுஷ், ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியானது.
கடந்த வாரம் வெளியான தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜிகர்தண்டா படம் இந்த வாரம் வெளியானால் விஐபியின் வசூல் குறையும் என்பதால் ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொன்னாராம் தனுஷ். அவர் கேட்டுக்கொண்டபடி ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார் கதிரேசன். இது தெரிய வந்ததும் ஜிகர்தண்டா படத்தின் கதாநாயகனான சித்தார்த், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பற்றி தன்னுடைய ட்விட்டரில் தன் கோபமாக சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த விஷயம் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
பல கோடி செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்தான் தன் படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானிக்க வேண்டியவர். அதன்படி ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஜிகர்தண்டா படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார். இதில் தலையிட சித்தார்த்துக்கு உரிமை இல்லை. அப்படி இருக்க தனக்கு சம்பளம் கொடுத்த முதலாளி கதிரேசன் பற்றி இவர் எப்படி கருத்து தெரிவிக்கலாம்? என்று சில தயாரிப்பாளர்கள் கோபக்குரல் எழுப்பி உள்ளனர். அது மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இது பற்றி புகார் கொடுத்து சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்த திட்டமிட்டுள்ளனர்.