மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களாக உள்ள ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.பி.குமார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் எல்ரெட் குமார், ஒய் நாட் சசி, அபினேஷ் இளங்கோவன் மற்றும் லட்சுமணன் அகியோர் இணைந்து ட்ரீம் பேக்டரி என்ற சினிமா விநியோகம் மற்றும் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தயாரிக்கும் படம் மட்டுமல்லாது மற்றவர்கள் படத்தையும் வாங்கி விநியோகிக்க உள்ளனர்.
இந்த கம்பெனியின் முதல் வெளியீடாக வர உள்ளது, சி.வி.குமார் தயாரித்துள்ள சரபம். இதனை கவுதம் மேனனின் உதவியாளர் அருண் மோகன் இயக்கி உள்ளார். நவின் சந்த்ரா, புதுமுகம் சலோனி லுத்ரா, ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர். சரபம் என்பது பறவையின் சிறகும் சிங்கத்தின் உடலும் கொண்ட புராண மிருகம். பறவை குணம், விலங்கின் பாய்ச்சல் கொண்ட மனிதர்களை கொண்ட கதை என்பதால் இந்த டைட்டில். ஆகஸ்டில் ரிலீசாகிறது. அதைத் தொடர்ந்து ட்ரீம் பேக்டரி மெட்ராஸ், காவியத் தலைவன், யான். லூசியா படங்களையும் வெளியிடுகிறது.