ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத். தற்போது ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட சிவா அதனை அஜீத்திடம் காட்டி ஒகே வாங்கியிருப்பது தான் லேட்டஸ்ட் தகவல். தற்போது கவுதம் மேனன் படத்தில் நடித்து வரும் அஜீத். அதை முடித்த உடன் மீண்டும் சிவாவுடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. அஜீத், சிவா தவிர வேறெதுவும் முடிவாகவில்லை. வீரம் படத்தின் இந்தி ஸ்கிரிப்டை முடித்துள்ள சிவா. அதில் அஜீத் கேரக்டரில் நடிக்க சல்மான்கானை அணுகி உள்ளார். அஜீத்தின் தமிழ் படத்தை முடித்துவிட்டு அதற்கு பிறகு வீரம் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று சிவா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.