மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜயசேதுபதிக்கு கடைசியாக நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்கள் ப்ளாப் என்றாலும், அதற்கு முன்பு வரிசையாக கொடுத்த 4 ஹிட்டுகளும் அவரது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வருகின்றன. அதோடு, அவர் நடிக்கிற கதைகள் எல்லாமே குறைந்த பட்ஜெட் படங்கள் என்பதால், எந்த காரணம கொண்டும் படங்கள் கையை கடிக்காது என்பதால் பல தயாரிப்பாளர்கள் அவரிடம் கால்சீட கேட்டு வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்த நிலையில, தற்போது 5 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வரும் விஜயசேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 55 வயது முதியவராக நடிக்கிறார். இது இப்போதைய இளவட்ட நடிகர்கள் யாரும் செய்யத்துணியாத ஒரு முயற்சியாகும். மேலும் இந்த ரோலுக்காக தொப்பை கெட்டப்பில் நடித்து வரும் அவர், கேரக்டரோடு அதிக இன்வால்வாகி விட்டாராம்.
அதன்காரணமாக, அடுத்தடுத்து தான் நடித்து வரும் படங்களை சுத்தமாக மறந்து விட்ட விஜயசேதுபதி, எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தையும் டீலில் விட்டிருக்கிறாராம். அந்த படத்தில் நடிக்க எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தயார் என்று ஷாம், ஆர்யா இருவரும் சொன்னபோதும் விஜயசேதுபதியின் கால்சீட் இல்லாததால் படம் இழுத்துக்கொண்டு கிடக்கிறதாம்.
அதோடு, கடைசி க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க ஒரு பிரமாண்ட ஜெயில் செட் போட்டுள்ள ஜனநாதன், ஒன்றரை கோடி செலவு செய்து அமைத்த செட் விஜயசேதுபதி வருவதற்குள் வீணாகி விடுமோ என்று செட்டையே வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.