மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர்களில் யார் அஜீத்தின் அடுத்தப்பட இயக்குநர் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில்.. அஜீத்தின் அடுத்த படம் பற்றி புதிய தகவல் ஒன்று அடிபடுகிறது. குஷ்பூ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அஜீத். அதுவே அவரது அடுத்தப்படம் என்கிறார்கள். அஜீத்திடம் குஷ்பூ கால்ஷீட் கேட்டதாகவும், அஜீத் அவரை தட்டிக்கழித்துவிட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் சொல்லப்பட்டது. இந்நிலையில் அஜீத்தே குஷ்பூவை அழைத்து கால்ஷீட் தருவதாக சொல்லியிருக்கிறாராம். இதனால் அஜீத்தின் பெருந்தன்மையை தன் சகாக்களிடம் சொல்லி பூரித்துப்போகிறாராம் குஷ்பூ.