சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தற்போதைய தென்னிந்திய நடிகைகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகள் யார்- யார் ? என்பதை அறிய ஐதராபாத்திலுள்ள ஒரு நிறுவனம் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பெருவாரியான ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு வாக்களித்து அவருக்கு முதலிடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக, தெலுங்கில் அவர் நடித்த கப்பார்சிங், பலுபு, எவடு, ரேஸ்குர்ரம போன்ற படங்களில் அவரது நடிப்பும், அழகும் எங்களை கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்களாம்.
அவரையடுத்து, தமன்னா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளாராம். மேலும், நயன்தாரா, ஸ்ரேயா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்ற நடிகைகள் முதல் 10 நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்களாம்,. ஆனால் கடந்த வருடம் வரை முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு வந்த சமந்தாவோ, இந்த வாக்கெடுப்பில் 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாராம்.
இதனால், பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் சமந்தா. இருப்பினும், தற்போது தமிழில் நடித்து வரும் படங்கள் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம்.