மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
''பாகன்'' படத்தை இயக்கியவர் அஸ்லாம், இவரிடம் உதவி இயக்குநராக இருப்பவர் காளி ரங்கசாமி. காளி ரங்கசாமி சொன்ன கதை ஒன்று அஸ்லாமுக்கு பிடித்து போக அதை படமாக்க பல தயாரிப்பாளர்களிடம் அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் எல்லோரும் படத்தின் கதை நன்றாக இருக்கிறது என்று சர்ட்டிபிகேட் மட்டும் கொடுத்தவர்கள் அதை தயாரிக்க முன்வரவில்லை. தன் உதவியாளரை எப்படியாவது இயக்குநராக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அஸ்லாம், தானே அப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். தனது நண்பர்கள் சிலரது உதவியோடு, 'பிலிம் பாக்ஸ் புரொடக்ஷ்ன்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்படத்தை அவரே தயாரிக்கிறார்.
படத்தின் ஹீரோவாக நடன அமைப்பாளர் தினேஷ் நடிக்கிறார். ஆரம்பத்தில் நடிக்க மறுத்த தினேஷ், பின்னர் கதையின் தன்மையை புரிந்து கொண்டு நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். படத்திற்கு 'குப்பை கதை' என்று பெயர் வைத்துள்ளனர். ஏன் இப்படி ஒரு தலைப்பு என்று கேட்டால், இந்தப்படத்தின் கதை முழுக்க முழுக்க சேரியின் பின்னணியை கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. அதனால் இப்படியொரு தலைப்பு வைத்துள்ளோம். எல்லோரும் கதையை எழுதிவிட்டு தான் படத்திற்கு பெயர் வைப்பார்கள், ஆனால் நான் படத்திற்கு கதையை எழுதும்போதே தலைப்பு வைத்துவிட்டேன் என்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி. சென்னையை சுற்றியுள்ள சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.