'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
'விஸ்வரூபம்' படத்தில் நடித்த பூஜா குமார், அதைத் தொடர்ந்து, மீண்டும் கமலுடன், 'விஸ்வரூபம்-௨, உத்தம வில்லன்' படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், முதல் படத்தில், 'பாசிடிவ்' ரோலில், பூஜாவை நடிக்க வைத்த கமல், இந்த இரு படங்களிலும், அவரை பக்கா வில்லியாக மாற்றி விட்டாராம். 'விஸ்வரூபம் - ௨' படத்தில் பூஜாவின் வில்லி நடிப்பு, கமலுக்கு திருப்தியை கொடுக்கவே, 'உத்தம வில்லன்' படத்தில், அவரை மனதில் வைத்து, ஒரு அதிரடி வில்லி கதாபாத்திரத்தை உருவாக்கி விட்டாராம். இந்த படத்தில், ஒரு காட்சியில், கமலுக்கும், பூஜாவுக்கும், பயங்கரமான சண்டை காட்சியும் உள்ளதாம். இதில், அபாரமாக நடித்து, படக் குழுவினரின் பாராட்டை பெற்றுள்ளார், பூஜா.