மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியாவில் எந்தத் திரையுலகிலும் இல்லாத அளவிற்கு வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பது தெலுங்குத் திரையுலகில் மட்டும்தான். வருடத்திற்கு ஒரு சிலர் இப்படி வந்து கொண்டேயிருககிறார்கள். நடிகர்களின் மகன்கள், இயக்குனர்களின் மகன்கள், தயாரிப்பாளர்களின் மகன்கள் என அவர்களை திரையுலகை ஆக்கிரமித்துக் கொள்வதால் புதிதாக யாருமே தெலுங்குத் திரையுலகில் நுழைய முடிவதில்லை.
நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜுனா, நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அகில் என இந்த குடும்பத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் இருக்கிறார்கள். அதே போல் என்டிஆர் மகன்கள் ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா மகன்கள் கல்யாண் ராம், ஜுனியர் என்டிஆர், மோகனகிருஷ்ணா மகன் தாரக ரத்னா என இவர்களது குடும்பத்திலும் மூன்று தலைமுறை நடிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகர் கிருஷ்ணா அவரது மகன் மகேஷ் பாபு, இவரது மகனும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளான். ரஜினியின் நண்பரான மோகன் பாபு, அவரது மகன்கள், விஷ்ணு, மனோஜ், மற்றும் சிரஞ்சீவி அவரது தம்பிகள் நாகேந்திர பாபு, பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, உறவினர் அல்லு அரவிந்த், அல்லு அர்ஜுன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இப்போது என்டிஆரின் பேரன்களில் ஒருவரும் பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்க்ஷக்னாவை நடிகராக அறிமுகப்படுத்த பாலகிருஷ்ணா திட்டமிட்டுள்ளாராம். நடிகர் நாகார்ஜுனா அவரது இளைய மகன் அகிலை அறிமுகப்படுத்தும் சமயத்தில் பாலகிருஷ்ணாவும் அவரது மகனை அறிமுகப்படுத்த நினைப்பதை தெலுங்குத் திரையுலகம் போட்டியாகவே பார்க்கிறதாம். பாலகிருஷ்ணா மகனுக்காக பல கதைகளைக் கேட்டு ஒரு கதையை தேர்வு செய்து விட்டாராம். அநேகமாக, விரைவில் இது பற்றிய முறையான அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள். பாலகிருஷ்ணாவும் விரைவில் 100வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.