'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படம் பெங்களூரை அடுத்த நெலமங்ளாவைச் சேர்ந்த பிரபல தாதா பெத்தனகரே சீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்றும், இதில் வினோத் காம்னி சீனாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
பெத்தன்னகரே சீனாவை கடந்த ஆண்டு போலீசார் என் கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அவனது கூட்டாளிகள் தற்போது சிறையில் உள்ளனர். அவர்கள் சீனாவின் வாழ்க்கையை படமாக எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வினோத் காம்ளியின் படம் தாதா சீனாவின் பகுதியிலேயே நடந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று கருதிய போலீசார் படப்பிடிப்புக்கு தடை விதித்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற போலீசார் படப்பிடிப்பை நிறுத்தியதோடு. சீனாவின் வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் சூழ்நிலையில் அவரைப் பற்றி படம் எடுக்க கோர்ட் அனுமதி வேண்டும் என்று கூறி படப்பிடிப்பு குழுவினரை திருப்பி அனுப்பி விட்டனர். இந்த சம்பவம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.