மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய்யின், துப்பாக்கி படம் வெளியாக இருந்தபோது, அப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சில முஸ்லிம் மத அமைப்புகள் படத்தில் சில காட்சிகளை கத்தரிக்க கேட்டனர். அதையடுத்து, கமலின் விஸ்வரூபம் படம் திரைக்கு வர இருந்தபோதும், முஸ்லிம்களுக்கு எதிரான படம் என்று போர்க்கொடி பிடித்தனர். அதனால் அரசாங்கமும் அந்த படத்தை வெளியிட தடை விதித்தது. பின்னர் நீதிமன்றம் வழக்கு என நாட்கள இழுத்தடிக்கப்பட்டு படம் திரைக்கு வந்தது.
இப்போது முஸ்லிம் இயக்குனர் அனீஸ் என்பவர் இயக்கியுள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்திலும், சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இல்லையேல் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, நீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர். இதுதொடர்பாக பதில் மனு அளிக்க சென்னை போலீஸ் கமிஷனர், தணிக்கை குழவின் மண்டல அதிகாரி, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார்.
இதனால், கோடை விடுமுறையிலேயே படத்தை வெளியிட்டு நாலு காசு பார்த்து விடலாம் என்று கணக்குப்போட்டு வைத்திருந்த ஆஸ்கர் பிலிம்ஸ், கோடையில் படம் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், இப்போது தடை கோரிய அமைப்புகளிடம் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளது.