மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தலைவன், என்னமோ ஏதோ படங்களில் நடித்த நிகிஷா பட்டேல் தற்போது நகுல் நடிக்கும் நாரதர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மலைபோல் அம்மணி எதிர்பார்த்த முதல் இரண்டு படங்களுமே அவரை ஏமாற்றி விட்டதால், இப்போது நாரதராவது கைகொடுப்பாரா? என்ற நப்பாசையில் இப்படத்தில நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதோடு, தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறி வந்த நிகிஷா, ரொமான்ஸ் காட்சிகளில் நகுல் உடன் அதிக நெருக்கம் காட்டி சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் யூனிட்டையே வேர்த்து விறுவிறுத்துப்போக செய்கிறாராம். அந்த அளவுக்கு ரொமான்ஸை தூக்கலாக வெளிப்படுத்துகிறாராம்.
அதேசமயம், ஆடை குறைப்பு சமாச்சாரத்தில் கடுப்படிக்கிறாராம் நடிகை. எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்று அவர் ஆரம்பத்தில் நம்பிக்கை வாக்குறுதிகளை அள்ளி விட்டதை நம்பி, ஒரு காட்சியில் ஸ்லீவ்லெஸ் என்று சொல்லிக்கொண்டு ஒரு காஸ்டியூமை நிகிஷாவிடம கொடுத்தார்களாம்.ஆனால், அதை மேக்கப் அறைக்கு சென்று அவர் அணிந்து பார்த்தபோது, ஓரிரு பகுதிகளை தவிர மொத்த உடம்பும் வெளியில் தெரிந்ததாம். இதனால் கொதித்துப்போன நடிகை, இந்த மாதிரியெல்லாம் டிரஸ் போட்டு நடிக்க, நான் ஒன்றும் ஆபாச நடிகை இல்லை என்று விசிறியடித்து விட்டாராம்.
நிகிஷாவின் இந்த அலம்பல் காரணமாக, டோட்டல் யூனிட்டும் அதிர்ச்சியடைந்து நின்றார்களாம். அதையடுத்து உடம்பு முழுக்க கவர் பண்ணும் காஸ்டியூமை கொடுத்து அவரை நடிக்க வைத்தார்களாம். ஆனால், படத்தில் கமிட்டானபோது எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று சொன்ன நிகிஷா பட்டேல் நடிக்கத் தொடங்கிய பிறகு இப்படி மாறி விட்டதால், அவரை அடுத்தடுத்து புக் பண்ணயிருந்த படாதிபதிகள் பின்வாங்கி நிற்கின்றனர்.