மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகைகளில் ப்ரியாமணி குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் யாராவது சின்ன குழந்தைகளை கொண்டு வந்திருந்தால், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த குழந்தையுடன கொஞ்சி விளையாடத் தொடங்கி விடுவார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது அண்ணன் குழந்தையை அடிக்கடி படப்பிடிப்பு தளங்களுக்கு கொண்டு வந்து விளையாடி பொழுதை கழித்து வந்தார்.
அவரையடுத்து அமலாபாலும் குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கிறார். தன்னுடன் நடிப்பவர்கள் யாராவது தங்கள் குழந்தைகளை ஸ்பாட்டுக்கு கொண்டு வந்தால் அவர்களை டீச்சர் போன்று துரத்திக்கொண்டே திரிவார். அந்தவகையில், தற்போது மலையளத்தில் நேரம் நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் நடித்து வரும் அமலாபால், அப்படப்பிடிபபு தளத்துக்கு நிவின் பாலி கொண்டு வந்த அவரது குழந்தையுடன்தான் எந்நேரமும் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தாராம்.
அதோடு, அந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது வருங்கால கணவரான டைரக்டர் விஜய்க்கு அனுப்பி விட்டு, தனக்கு குழந்தைகள் மீதுள்ள பாசத்தை உணர்த்தியுள்ளாராம் அமலாபால்.