மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கெளதம்மேனன் இயக்கும், அஜீத்தின் 55வது படத்தில் பரதேசி தன்ஷிகா வில்லி வேடத்தில் நடிப்பதாக அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. அதேசமயம், அந்த படத்தில் இரண்டு வேடங்களில் அஜீத், நடிக்க அவருடன் மோதும் மெகா வில்லன்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது.
அப்படியென்றால், தன்ஷிகர் வில்லி இல்லையா? என்று அப்பட வட்டாரத்தை விசாரித்தால், படத்தில் தன்ஷிகாவுக்கு ஒரு வித்தியாசமான வேடம். அது வில்லி அளவுக்கு இருக்காது. அவர் பேசும் வசனங்களும், அவர் நடித்துள்ள காட்சிகளும் மிரட்டலாக இருக்கும். அதனால் அதைப்பார்த்து அவர் வில்லி என்று செய்தி பரவி விட்டது என்கிறார்கள்.
மேலும், இதுகுறித்து தன்ஷிகா தற்போது விடுத்துள்ள செய்தியில், நான் அஜீத்தின் தீவிரமான ரசிகை. அவர் படத்தில் ஹீரோயினி இல்லையென்றாலும் ஏதாவது கேரக்டர் கிடைத்தாலும் நடித்து விட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த வாய்ப்பு இப்போது கிடைத்திருப்பதால் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், அஜீத்துடன் வில்லியாக நடிப்பதாக பரவிய செய்தி உண்மையல்ல. அஜீத்துடன் வில்லியாக நான் நடிப்புக்காககூட மோத மாட்டேன். அந்த அளவுக்கு அவரது கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒரு தீவிரமான ரசிகை என்கிறார் தன்ஷிகா.