மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
உலக அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நாளை (மே 14) தொடங்குகிறது. உலகம் முழுவதும் 2013ம் ஆண்டு வெளியான மிகச் சிறந்த படங்கள் திரையிடப்பட்டு பல்வேறு பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இருந்து டிட்லி என்ற ஒரே ஒரு இந்திப் படம் மட்டும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கிறது. இந்த படவிழாவில் கலந்து கொள்வதே திரையுலகின் பெருமையாக கருதப்படுகிறது. விருதுகள் ஆஸ்கர் விருதுக்கு நிகராக மதிக்கப்படுகிறது.
நாளை முதல் 25ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கும் இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமலஹாசன், இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பிரபலங்கள் கேன்ஸ் சென்றிருக்கிறார்கள்.