மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினி உடல்நலமில்லாமல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தமிழகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று பலதரப்பட்ட விசேஷ பூஜைகள்,கூட்டு பிரார்த்தனைகளை செய்தனர். அவர்களது பிரார்த்தனையின் பலனாக ரஜினி நலம் பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், மே 9-ந்தேதி ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள கோச்சடையான் படம் வெற்றி பெறவும், தற்போது அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பதி கோயிலுக்கு வேலூர் ரசிகர்கள் நடைபயணமாக சென்று பிரார்த்தனை செய்ததையடுத்து, திருப்பூரில் உள்ள ரசிகர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தியுள்ளனர். அதையடுத்து ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
மேலும், ராமேஸ்வரம் தர்கா, சர்ச்களில் 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ள ரஜினி ரசிகர்கள், ராமேஸ்வரம் தீர்த்தத்தை எடுத்து சென்று ரஜினியின் வீட்டில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஆக, கோச்சடையான் திரைக்கு வருவது வரை இதுபோன்ற பூஜை, சிறப்பு வழிபாடுகள் ஆங்காங்கே தொடரும் என்கிறார்கள்.