மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பேராண்மை படத்தில் அறிமுகமாகி அரவான், பரதேசி படங்கள் வரை திறமை காட்டிய தன்ஷிகா, தற்போது 'திறந்திடு தீசே', 'காத்தாடி', 'விழித்திரு' படங்களில் நடித்து வருகிறார். தன்ஷிகா இப்போது பாபாவின் தீவிர பக்தையாகி விட்டார். பாபா தொடர்பான பிரசங்கம், வழிபாடு, மெடிட்டேஷன்களில் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இனி என் கையில் ஒரு மந்திரக்கோல் கிடைக்கப்போகிறது. நான் திறந்திடு தீசே என்று சொன்னால் சொர்க்கவாசல் திறக்கப்போகிறது. நான் நடிக்கும் திறந்திடு தீசேவில்தான் இந்த காட்சிகள், ஆனாலும் நான் இப்போது பாபா, வைஷ்ணவிதேவியின் தீவிர பக்தை ஆகிவிட்டதால் இது என் வாழ்விலும் நிஜமாக நடக்கப்போகிறது.
சிம்ரன் மாதிரி பி2 வாக (பெர்பாமென்ஸ் மற்றும் பெர்சினாலிட்டி) வரவேண்டும் என்ற உழைத்துக் கொண்டிருக்கிறேன். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கு யோகா, மெடிட்டேஷன் செய்கிறேன். மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அளவிற்கு எக்ஸ்பர்ட் ஆகியிருக்கிறேன். பாண்டியன் மாஸ்டரிடம சிலம்பம் கற்ற வருகிறேன் என்கிறார் தன்ஷிகா.